புதுச்சேரி: புதுச்சேரியில் 30 தொகுதி களிலும் தனித்து போட்டியிட பா.ம.க., முடிவு செய்து உள்ளது.
புதுச்சேரி வழுதாவூர் சாலையில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில், மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஆலோசனைக்கு பின், நிர்வாகிகள் கூறியதாவது:
தமிழகத்தில் தே.ஜ., கூட்டணியுடன் பா.ம.க., போட்டியிட்டாலும், புதுச்சேரியில் உள்ள கூட்டணி தலைவர்கள் தங்களை மதிக்கவில்லை. முதல்வர் ரங்கசாமியை நான்கு முறை சந்தித்து, ஐந்து இடங்கள் கேட்டோம். ஆனால், அவர் எதுவும் சொல்லவில்லை.
பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தையும் சந்தித்தோம். புதுச்சேரி பா.ஜ., பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவையும் சந்தித்தோம். அவர்களிடம் நல்ல பதில் கிடைக்கவில்லை.
கடந்த 2021 தேர்தலில், பா.ம.க., ஆதரவோடு, என்.ஆர்.காங்., வெற்றி பெற்றது. இந்நிலையில், புதுச்சேரியில் 30 தொகுதி களிலும் தனித்து போட் டியிட முடிவு செய்துள்ளோம் .
இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.
