"நாங்கள் அப்பாயிண்ட்மெண்ட் செய்யப்பட்ட முதல்வர்கள்" – திமுக கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பளீச்

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நேற்று தி.மு.க தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில், தொகுதி வாரியாக ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். அந்த வகையில், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க-வில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

ஸ்டாலின்

அப்போது, “இந்த உலகத்தை ஒன்பது கோள்கள் இயக்குகின்றன. அதில் சக்தி வாய்ந்த சூரியன் சின்னத்தை பேரறிஞர் அண்ணா அன்று அறிவியல் பூர்வமாகத் தேர்ந்தெடுத்தார். இன்று அதே உதயசூரியன் சின்னத்தில் தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிக்கத் தயாராகிவிட்டனர்.

அநியாயத்திற்கு தமிழகம் தலைகுனியாது என்பதால், மு.க. ஸ்டாலின் இரண்டாம் முறையாக முதலமைச்சராக வருவது உறுதி. அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், அம்மா, இப்போது ஸ்டாலின் இவர்கள் எல்லோரும் மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்.

நான் உட்பட மற்றவர்கள் எல்லோரும் அப்பாயிண்ட்மென்ட் செய்யப்பட்டவர்கள். நன்றிகெட்ட அரசியல்வாதி இந்த உலகத்திலேயே எடப்பாடி பழனிசாமிதான். தேர்தலில் என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்று உதயகுமார் போன்றவர்கள் திட்டமிட்டனர்.

6 சட்டமன்றத் தொகுதிகளில் சதி செய்தார்கள். ஆனால் என்ன நடந்தது? இன்று அவர்களே டெபாசிட் இழந்து நிற்கிறார்கள். அ.தி.மு.க-வை இன்று குழி தோண்டிப் புதைத்துக்கொண்டிருப்பவர் எடப்பாடி பழனிசாமிதான். கடப்பாறை எடுத்து கட்சியைப் புதைத்த பெருமை அவரையே சாரும்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நான் எடப்பாடி பற்றிப் பேசக் கூடாது என உதயகுமார் எச்சரிக்கிறாராம். என்னை எச்சரிக்க இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? நான் ஒரு சாதாரணத் தொண்டன். மாநாட்டில் கூட 200-க்கும் மேற்பட்டோர் என்னுடன் நின்றனர். நான் தளபதி வாழ்க என்று சொன்னேன். பதவிக்காக நான் அலைபவன் அல்ல. எடப்பாடி பழனிசாமி தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும், இல்லையெனில் வரலாறு அவரை மன்னிக்காது” என்றார்.

Source link