நமது நிருபர்140 கோடி இந்தியர்களின் எரிசக்தி பாதுகாப்புக்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது என வர்த்தக

நமது நிருபர்

140 கோடி இந்தியர்களின் எரிசக்தி பாதுகாப்புக்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது என வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பார்லிமென்டில் பியுஷ் கோயல் கூறியதாவது: கச்சா எண்ணெய் சப்ளையர்களில் எந்த மாற்றமும் விலை உயர்வுக்கு வழி வகுக்காது. 140 கோடி இந்தியர்களின் எரிசக்தி பாதுகாப்புக்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது. விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது. திறமையான தொழிலாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கவும், தொழில்துறையை மேம்படுத்த மேக் இன் இந்தியா திட்டத்தை அரசு ஆதரிக்கிறது.

இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்துள்ளது. இந்த விகிதம் நமது போட்டி நாடுகள் மீது அமெரிக்கா விதித்த வரிகளை விடக்குறைவு என்பதை குறிப்பிட விரும்புகிறேன். இதன் மூலம் அமெரிக்க சந்தையில் இந்தியாவின் ஏற்றுமதி போட்டித்தன்மையை அதிகரிக்கிறது. இந்த ஒப்பந்தம் ஏற்றுமதியாளர்களுக்கும், குறிப்பாக உற்பத்தி துறையில் அதிக நன்மையை ஏற்படுத்தும். இவ்வாறு பியுஷ் கோயல் கூறினார்.

Source link