புதுடில்லி: ” நாடு முழுதும் 12 ஆயிரம் முறை சோதனை நடத்தப்பட்டு 15 ஆயிரம் பதுக்கல் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,” என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ம்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுதுறை கூடுதல் செயலர் சுஜாதா சர்மா கூறியதாவது:
கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் 12 ஆயிரம் சோதனைகள் நடத்தப்பட்டு 15 ஆயிரம் பதுக்கல் சிலிண்டர் பறிமுதல் செய்யப்பட்டது. டில்லியில் 600 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
உ.பி.,யில் 450 சோதனை நடத்தப்பட்டு 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். காஷ்மீரில் 564 சோதனை நடத்தப்பட்டு பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சோதனை நடத்தப்பட்டதுடன், சமையல் மற்றும் வணிக ரீதியிலான சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மபியில் 1,200 சோதனை நடத்த நடத்தப்பட்டு 1800 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதனை தவிர்த்து எண்ணெய் நிறுவனங்களும், எல்பிஜி விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களிலும்சோதனை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
