‘ரஜினி தைரியமானவர்…’ – ஆதவ்வின் மேடையிலேயே அவரை விமர்சித்த ரஜினி ரசிகர் அசோக் |“Rajinikanth Is Courageous: Fan Ashok Slams Aadhav on His Own Stage”

சென்னை கொளத்தூரில் தவெகவின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் தவெகவில் சமீபத்தில் இணைந்த ரஜினி ரசிகர் அசோக், ஆதவ் அர்ஜூனாவை மேடையில் வைத்துக் கொண்டே “ரஜினியை யாரும் தவறாக பேசினால் தட்டிக் கேட்பேன்’ எனப் பேசி பரபரப்பை கிளப்பியிருந்தார்.

முன்னாள் ரஜினி ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் அசோக் பேசுகையில், ‘எனக்கு 59 வயது. 13 வயதிலிருந்து ரஜினியை ரசித்து ரசிகராகிவிட்டேன். என் அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்தது ரஜினிதான். எப்படி நேர்மையாக எளிமையாக வாழ வேண்டும் என்பதை என் குரு ரஜினிதான் கற்றுக்கொடுத்தார்.

Source link