– நமது நிருபர் –
வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவித்திருப்பது தமிழுக்கு ஏற்பட்ட அவமானம் அல்ல, இது இந்தியாவுக்கே அவமானம் என்று எழுத்தாளர் பவா செல்லத்துரை விமர்சனம் செய்துள்ளார்.
வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான வைரமுத்துவுக்கு விருது கொடுப்பதா என்று ஒரு தரப்பினரும், வைரமுத்து எழுதுவது இலக்கியமே அல்ல என்று இன்னொரு தரப்பினரும், சரமாரியாக புகார் எழுப்பி வருகின்றனர்.
தகுதியற்ற வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்குவது தமிழுக்கே அவமானம் என்று பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்கு, இலக்கியவாதிகள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல எழுத்தாளர் பவா செல்லதுரை தனது கருத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். அதில் அவர், வைரமுத்துவுக்கு ஞானபீடம் என்பது தமிழுக்கு ஏற்பட்ட அவமானமல்ல. அதன் இந்திய அளவிலான இதுவரை பரிசு பட்டியலைப் பாருங்கள். இது இந்திய அவமானம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
