தோனிக்கு '8' ராசியா

புதுடில்லி: இந்தியாவில் பிரிமியர் தொடரின் 19 வது சீசன், வரும் 28ல் துவங்க உள்ளது. இதில் ஐந்து முறை கோப்பை வென்ற சென்னை அணி கேப்டனாக தோனி 44, களமிறங்க உள்ளார். இவரது ஜெர்சி ‘நம்பர் 7’. வரும் சீசனில் 8ம் எண் கொண்ட ‘ஜெர்சி’ அணிந்து விளையாடப் போவதாக சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார். இது விளம்பரத்தின் ஒருபகுதியாக இருக்கலாம். இதன் உண்மையை அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இதற்கிடையே தோனியின் பேட்டிங் வரிசை குறித்து தென் ஆப்ரிக்க முன்னாள் வீரர் டிவிலியர்ஸ் கூறுகையில்,”கடந்த சில சீசன்களில் தோனி, 8 அல்லது 9 வது இடத்தில் களமிறங்குகிறார். இது, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. என்னைப் பொறுத்தவரையில் பேட்டிங்கில் 4, 5 அல்லது 6வது இடத்தில் களமிறங்க வேண்டும். இல்லையெனில் மற்றவர்களுக்கு வழிவிட்டு, ஒதுங்கி விட வேண்டும்,” என்றார்.

இந்திய அணி முன்னாள் கேப்டன் கும்ளே கூறுகையில்,”ஒவ்வொரு தலைமுறைக்கும் நட்சத்திர வீரர்கள் மாறிவிடுவர். இந்திய கிரிக்கெட்டில் கவாஸ்கருக்கு அடுத்து சச்சின் வந்தார். அடுத்து டிராவிட், கங்குலி வந்தனர். தோனி, கோலியை பொறுத்தவரையில் இன்னும் விளையாடி வருகின்றனர்.

இந்தியாவுக்கு உலக கோப்பை வென்று தந்த சாம்சன், சென்னை அணிக்கு வந்தது சிறப்பான தருணமாக அமைந்துள்ளது,”என்றார்

Source link