30 கரன்சிகளுக்கு ஒரே போரக்ஸ் கார்டு

இ ந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா மற்றும் வணிக ரீதியாக செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பண பரிமாற்றத்தை எளிதாக்க, ‘டபிள்யு.எஸ்.எப்.எக்ஸ்., குளோபல் பே’ நிறுவனம் புதிய போரக்ஸ் கார்டு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இந்த கார்டு வாயிலாக, அமெரிக்க டாலர், யூரோ, பவுண்டு, ஜப்பானிய யென் என மொத்தம் 30 வகையான கரன்சிகளை நிர்வகிக்கலாம். ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி கார்டு வாங்க வேண்டிய அவசியமில்லை.

இந்த ஒரு கார்டை உலகெங்கிலும் உள்ள 180க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்த முடியும். இந்நிறுவனத்தின் மொபைல் ஆப் வாயிலாக இந்த கார்டை வாங்கி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link