ஆசிய கால்பந்து: பைனலில் ஆஸ்திரேலியா

பெர்த்: ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் பைனலுக்கு ஆஸ்திரேலிய பெண்கள் அணி முன்னேறியது.

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன் நடக்கிறது. 12 அணிகள் மூன்று பிரிவுகளாக பங்கேற்கின்றன. லீக் சுற்றில் ‘சி’ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, பங்கேற்ற 3 போட்டியிலும் தோற்று வெளியேறியது. நேற்று பெர்த்தில் நடந்த அரையிறுதியில் ஆஸ்திரேலியா, சீனா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

சொந்தமண்ணில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, 17 வது நிமிடத்தில் கெய்த்லின் பூர்டு முதல் கோல் அடித்தார். 26 வது நிமிடம் சீனாவின் ஜங் லின்யான் ஒரு கோல் அடிக்க, ஸ்கோர் 1-1 என ஆனது.

இரண்டாவது பாதியில் ஆஸ்திரேலியாவின் சாம் கெர் (58) ஒரு கோல் அடித்தார். முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு (மார்ச் 21) முன்னேறியது. இதில் ஆஸ்திரேலிய அணி தென் கொரியா அல்லது ஜப்பானை எதிர்கொள்ளும்.

Source link