நாமினேஷன் விதிகளில் புதிய திருத்தங்கள்

டிமேட் கணக்கு மற்றும் மியூச்சுவல் பண்டுகளுக்கு வாரிசுதாரர் நியமனத்தை எளிதாக்கும் வகையில், சில திருத்தங்களை செபி பரிந்துரைத்துள்ளது.

அதன் முக்கிய அம்சங்கள்

 இனி நாமினி யின் பெயர் மற்றும் உறவுமுறையை மட்டும் குறிப்பிட்டால் போதும். பான் அல்லது ஆதார் போன்ற கூடுதல் விபரங்கள் கட்டாயமில்லை

 ஒரு கணக்குக்கு அதிகபட்சமாக 4 நாமினிகளை நியமிக்க பரிந்துரை (இதற்கு முன் 10 வரை அனுமதிக்கப்பட்டிருந்தது)

 புதிய கணக்கு துவக்கும்போது, வாரிசுதாரர் நியமனம் செய்வது என்பது ‘டிபால்ட் தேர்வாக’ இருக்கும். பழைய கணக்குகளில் நாமினி இல்லை என்றால், அவர்களுக்கு தொடர்ந்து நினைவூட்டல் செய்திகள் அனுப்பப்படும்

 கணக்கு வைத்திருப்பவர் உடல்நலக் குறைவால் (உடல் ரீதியாக மட்டும்) செயல்பட முடியாதபோது, அவரது கணக்கை நாமினி இயக்குவதில் உள்ள சிக்கல்களை தவிர்க்க, தற்போதுள்ள ‘பவர் ஆப் அட்டர்னி’ முறையையே பயன்படுத்தலாம்.

Source link