நடிகர் அமீர் கானுக்கு தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல்

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.

அண்மையில் நடிகர் அமீர்கான் 3வது திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவியின் பெயர் கவுரி ஸ்ப்ராட். இவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் கிடையாது. கவுரியைப் போலவே அமீர்கானின் முதல் மற்றும் இரண்டாவது மனைவி ஆகியோரும் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள்.

இந் நிலையில் அமீர் கானுக்கு தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சமூக வலைதளம் மூலமாக கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறது. அமீர்கானும், அவருடன் இருப்பவர்களும் லவ் ஜிகாத்தை ஊக்குவிப்பதாக கூறி பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஆர்சூ பிஷ்னோய், டைசன் பிஷ்னோய் ஆகியோரின் முகநூல் பக்கத்தில் இருந்து இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு இருக்கிறது.

அந்த பதிவில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது;

எங்கள் கலாசாரம் மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதல், இதை பொறுத்துக் கொள்ள முடியாது. அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, போதுமான அவகாசமும் அளிக்கப்பட்டு உள்ளது. இது எங்களின் இறுதி எச்சரிக்கை. விரைவில் பதிலடி கொடுக்கப்படும். பிரபலம் என்ற பெயரில் இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிப்போரின் மூச்சை அடக்குவோம்.

இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் கொலை மிரட்டல் குறித்து நடிகர் அமீர் கான் இன்னமும் போலீசில் முறைப்படி புகார் எதுவும் அளிக்கவில்லை.

Source link