தி.மு.க-வில் இருந்து விலகிய கோவை கவுன்சிலர்: இன்னும் 20 பேர் விலக ரெடி

கோவை மாநகராட்சி 22-வது வார்டு கவுன்சிலராக உள்ள கோவை பாபு, தி.மு.க-வில் இருந்து விலகுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இனி கட்சி சார்பின்றி சுயேச்சை கவுன்சிலராக மக்களுக்காக தொடர்ந்து செயல்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் ஒரே நாளில் நடந்த 2 விபத்துக்கள்… கல்லூரி மாணவர் – குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது

கோவை மாவட்ட தி.மு.க-வின் செயல்பாடுகள் மீது கடும் அதிருப்தி உள்ளது. கோவையில் தி.மு.க-வை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது விருப்பப்படி நடத்தி வருகிறார். கட்சிக்குள் நிலவும் சூழல், லஞ்சம் மற்றும் கட்சி நிதி தொடர்பான விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தி.மு.க-வில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, தன்னுடன் மேலும் 20-க்கும் மேற்பட்ட தி.மு.க கவுன்சிலர்கள் கட்சியில் இருந்து விலகுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுதொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அவர் கூறினார். அதேநேரத்தில், தற்போதைய தமிழக அரசு லஞ்சம், லாப நோக்கம் இன்றி செயல்பட்டு வருவதாகவும், மக்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோவை பாபு தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியில் தி.மு.க-வைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் வெளிப்படையாக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பதும், மேலும் பல கவுன்சிலர்கள் விலக உள்ளதாக கூறியிருப்பதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பி. ரஹ்மான்

Source link