உயிருக்குப் போராடும் பிரசவித்த தாய்; தவறான ரத்தத்தைச் செலுத்திய மருத்துவமனை

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டம் தவ்ரா பவுரி கிராமத்தைச் சேர்ந்தவர் தபு பில் (24).  கடந்த 11 ஆம் நீதி சுகப்பிரசவம் மூலமாக அந்த குழந்தையை பெர்றேடுத்தார். இருப்பினும் பிரசவத்திற்கு பிந்தைய உடற் சோர்வு காரணமாக அவரை ஜோத்புரில் உள்ள உம்மத் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.  

பிரசவத்தின் போது அவருக்குக் கடுமையான ரத்தப் போக்கு ஏற்பட்டது. அதனால், அவரது உடல் நிலை மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது. இந்நிலையில், மருத்துவமனையில் அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. முதல் முறை அவருக்கு அவரது சொந்த ரத்த வகையான ’ஓ பாசிட்டிவ்’ ரத்தம் செலுத்தப்பட்டது. இதையடுத்து, அவரது உடல் நலம் சற்று முன்னேற்றம் அடைந்தது. மறுநாள் அவருக்கு இரண்டாவது முறையாக ரத்தம் செலுத்தப்பட்ட போது தவறுதலாக ’பி பாசிட்டிவ்’ ரத்தம் செலுத்தப்பட்டது. 

இதனால், அவருக்கு உடல் நடுக்கம் ஏற்பட்டதுடன், சிறுநீர்ப் பையில் ரத்தம் வெளியேறியது. மேலும், அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து, அவர் மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மருத்துவர் கூறுகையில், ” தபுவிற்கு தவறான ரத்த வகை செலுத்தப்பட்டதால் அவரது சிறுநீரகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், அவருக்கு ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. இருப்பினும் அவர் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்” என்று தெரிவித்தார்.  

இது குறித்து அவரது கணவர் கூறுகையில், ” ரத்தவகை மாற்றிச் செலுத்தப்பட்டது குறித்து மருத்துவமனை நிர்வாகம் எங்களுக்குத் தெரியப்படுத்தவில்லை” என்று குற்றம் சாட்டியிருந்தார். இதனிடையே, அருகருகே இருந்த இரு பெண்களின் பெயர்கள் மற்றும் அவர்களது கணவர்களின் பெயர்கள் ஒரே மாதிரியாக இருந்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  

Source link