மேகதாது அணை விவகாரம்: நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர தி.மு.க எம்.பி-க்கள் நோட்டீஸ்

நாடாளுமன்ற தி.மு.க. மக்களவைக்குழு தலைவர் மற்றும் கழக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., மக்களவைச் செயலர், கழக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, எம்.பி., மாநிலங்களவை செயலர் நடைபெற பாராளுமன்ற கூட்ட தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவை அலுவல் நடத்தை விதிகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள பிற அலுவல்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்திடவும் பின்வரும் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வரவும், மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அதன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது:-   
 
ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டுவர தி.மு.க. மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி., அவர்களும் –  மாநிலங்களவையில் கழக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, எம்.பி., அவர்களும் நோட்டீஸ்  அளித்துள்ளனர். பாராளுமன்ற தி.மு.க. மக்களவைக்குழுத் தலைவர் – கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., அவர்கள் மக்களவைச் செயலர் அவர்களுக்கும், கழக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா, எம்.பி., அவர்கள் மாநிலங்களவை செயலர் அவர்களுக்கும், 

நடைபெற  பாராளுமன்ற கூட்டத் தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவை அலுவல் நடத்தை விதிகளின் கீழ்  பட்டியலிடப்பட்டுள்ள பிற அலுவல்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்திடவும் – பின்வரும்   ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வரவும்,  மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு :-

“காவிரி ஆற்றின் மீது முன்மொழியப்பட்டுள்ள மேகதாது சமநிலைப்படுத்தும் நீர்த்தேக்கம் (Mekedatu Balancing Reservoir) குறித்த கவலைகள், அதனால் பாதிக்கப்படும் மாநிலமான தமிழ்நாட்டின் மீதான அதன் தாக்கம் மற்றும் இது தொடர்பாக ஒரு தீர்ப்பாயத்தை அமைப்பதன் அவசியம் ஆகிய அவசர முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தை விவாதித்து தீர்மானத்தைக்  கொண்டு வருதல்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link