தவெக தலைவர் முதல்வர் விஜய்யின் கடைசி படமான ‘ஜன நாயகன்’ இன்னமும் வெளியாகாமல் இருக்கிறது. முதலில் பொங்கல் வெளியீடாக அறிவிக்கப்பட்டு திரைப்பட வாரியத்தின் சான்றிதழ் கிடைக்காததால் உயர்நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்று பின்பு வழக்கு வாபஸ் பெற்று பிறகு மொத்த படமும் இணையத்தில் கசிந்து பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்தது. இருப்பினும் சட்ட சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்காமல் போனது.
சமீபத்தில் இப்படத்திற்கு மத்திய திரைப்பட வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியது. மேலும் சான்றிதழுடன் விவரங்கள் வெளியாகி படத்தின் நீளம் 3 மணிநேரம் 3 நிமிடம் 11 வினாடிகள் எனவும் தெரியவந்தது. ஜூலை 23ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அண்மையில் அறிவிப்பு வெளியானது. இதனால் படத்தை வரவேற்க விஜய் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
இந்த நிலையில் தவெக கட்சி நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆனந்த் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். முதல்வர் விஜய் நடித்த கடைசி படம் என்பதால் தியேட்டர்களை சிறப்பாக அலங்கரிக்க வேண்டும் எனவும் பட வெளியீட்டைத் திருவிழா போல் பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும் எனவும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
