தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில், கடந்த சில வாரங்களாக நிலவி வரும் திடீர் தட்பவெப்ப நிலை மாற்றம் மற்றும் ஆங்காங்கே பெய்து வரும் கோடை மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ மாதவாரி புள்ளிவிவரங்கள், பொதுமக்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் மத்தியில் பெரும் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரலுக்குப் பின் மீண்டும் உயரும் கிராஃப்
சென்னையில் இந்த 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே டெங்கு பாதிப்புகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டின் மாதவாரி டெங்கு பாதிப்பு விவரங்கள் இதோ:
ஜனவரி: 311 பேர் பிப்ரவரி: 202 பேர் மார்ச்: 167 பேர் ஏப்ரல்: 130 பேர் மே: 154 பேர் ஜூன்: 205 பேர்
மாநகராட்சித் தரவுகளின் அலசல்
கடந்த ஜனவரி மாதத்தில் 311 ஆக இருந்த பாதிப்பு, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் படிப்படியாகக் குறைந்து வந்தது. ஆனால், மே மாதத்தில் இருந்து பாதிப்பு மீண்டும் ஏறுமுகமாக மாறி, ஜூன் மாதத்தில் 205 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தின் முதல் 15 நாட்களிலேயே சென்னையில் மேலும் 65-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டைவிடக் குறைவு என்றாலும் அலட்சியம் வேண்டாம்!
கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை பாதி வரை சென்னையில் 1,910 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்த நிலையில், இந்த 2026 ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் 1,198 பேருக்கு மட்டுமே டெங்கு கண்டறியப்பட்டுள்ளது.கடந்த ஆண்டை ஒப்பிடும்போது சுமார் 800 பாதிப்புகள் வரை குறைந்திருந்தாலும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வழக்கமாகத் தொடங்கும் டெங்கு சீசன் தற்போது ஆரம்பமாகியுள்ளதால், இந்த முன்கூட்டியே எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் அவசியமாகிறது.
களமிறங்கிய கொசு ஒழிப்புப் படை
டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் மட்டுமே முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் தன்மை கொண்டவை. இதனைத் தடுக்க சென்னை மாநகராட்சி தற்போதே போர்க்கால நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது
வீடு வீடாகச் சோதனை
சென்னை முழுவதும் 2,073 உள்நாட்டுப் பகுதி கொசு ஒழிப்புப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டு, ஒரு பணியாளருக்கு 500 வீடுகள் வீதம் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நகரில் வேலைகள் தொடங்கப்படாமல் மற்றும் அரைகுறையாகப் பூட்டப்பட்டுக் கிடக்கும் 8,000-க்கும் மேற்பட்ட புதிய கட்டுமான இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு தேங்கும் தண்ணீரை அப்புறப்படுத்தாத உரிமையாளர்களுக்கு அதிரடியாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மக்கள் திறந்தவெளி டிரம் மற்றும் தொட்டிகளில் தண்ணீர் சேமித்து வைக்கும் இடங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவர்கள் தரும் முக்கிய எச்சரிக்கை மற்றும் அறிகுறிகள்
பொதுவாக டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் பின்வரும் முக்கிய அறிகுறிகள் தென்படும்.
கடுமையான காய்ச்சல் மற்றும் தலைவலிகண்கள் மற்றும் தசைப் பகுதிகளில் தீவிர வலிஉடலில் ஆங்காங்கே சிவப்புப் புள்ளிகள் தோன்றுதல்சிலருக்கு ரத்தத்தட்டுக்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைதல்காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் பொதுமக்கள் யாரும் மருந்தகங்களுக்குச் சென்று தன்னிச்சையாக மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது என்றும், உடனடியாக அருகில் உள்ள அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களையோ அல்லது மருத்துவர்களையோ அணுகி ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Source link
