புதுடில்லி: சீனாவுக்கு சென்று கொண்டிருந்த ரஷ்யாவிற்கு சொந்தமான கச்சா எண்ணெய் கப்பல் இந்தியா நோக்கி வந்து கொண்டுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனையடுத்து ஹார்முஸ்வழியாக செல்லும் ஆயில் டேங்கர் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்து தடைபட்டுள்ளது.இதனையடுத்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ள இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்கா அனுமதி அளித்து இருந்தது.
இதனையடுத்து 3 கோடி பாரல்கள் ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் திட்டமிட்டு இருந்தன.இந்நிலையில், ரஷ்யாவின் பால்டிக் துறைமுகத்தில் இருந்து சீனாவுக்கு கச்சா எண்ணெய் உடன் கிளம்பிய ஆயில் டேங்கர் கப்பல் இந்தியா நோக்கி வந்து கொண்டுள்ளது.
முதலில் இந்த கப்பல் சீனாவில்உள்ள ரியாவோ துறைமுகம் நோக்கி சென்று கொண்டு இருந்தது. தற்போது இந்த கப்பல், நியூ மங்களூரு நோக்கி வந்து கொண்டுள்ளதை கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும், இக்கப்பல், வரும் 21ம் தேதி வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு சுயஜ்மேக்ஸ் ஜூவுஜூ என் என்ற கப்பல் இந்தியாவை நோக்கி கிளம்பி உள்ளதாகவும், இது மார்ச் 25 ம் தேதி வந்தடையும் என தெரியவந்துள்ளது. இதற்கு மேலும், ரஷ்ய கச்சா எண்ணெய் உடன் ஏழு ஆயில் டேங்கர் கப்பல்கள் இந்தியாவுக்கு வர உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
