எத்தனாலின் பயன்பாட்டை அதிகரிப்பதால் இவ்வளவு நன்மைகள்; ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் சொல்வது இதுதான்!

நமது சிறப்பு நிருபர்

‘எத்தனாலின் பயன்பாட்டை அதிகரிப்பதன் வாயிலாக இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதோடு, வலுவான ஒரு எரிசக்திச் சூழலமைப்பை உருவாக்க முடியும்’ என ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் தெரிவித்துள்ளது.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் தனது பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூலம் அரசின் வழிகாட்டுதல்களின்படி எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை வழங்கி வருகிறது.

கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் இந்த எத்தனால் கலப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இது தொடர்பாக, மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் ஒரே இரவில் மாறக்கூடும். ஆனால், உள்நாட்டில் தயாரிக்கப்படும் எத்தனால் விலைகள் அவ்வாறு மாறுவதில்லை.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எத்தனாலின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதோடு, மேலும் வலுவான ஒரு எரிசக்திச் சூழலமைப்பிற்கு வழிவகுக்கிறது.

எரிபொருள் விநியோகச் சங்கிலியில் உள்நாட்டுப் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் எரிசக்திப் பாதுகாப்பை மேம்படுத்த முடியும். இவ்வாறு ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் தெரிவித்துள்ளது.

Source link