72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.இந்திய அளவில் சில முக்கிய ஆளுமைகள் ஜூரியாக செயல்பட்டு, தேசிய விருதுக்கான படைப்புகளை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அதில் தமிழகத்தில் இருந்து முழுநீள திரைப்படங்களுக்கான பிரிவில் (feature film) கலா மாஸ்டர் பங்கேற்றார். Non feature film – குறும்படங்கள் மற்றும் ஆவணப் படங்கள், அனிமேஷன் ஆகிய பிரிவுக்கு இயக்குனர் இ.வி.கணேஷ் பாபு, தமிழ்நாட்டில் இருந்து சென்று ஜூரியாக செயல்பட்டு இருக்கிறார். 2024ம் ஆண்டு தணிக்கை சான்றிதழ் பெற்ற படைப்புகளுக்கான விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேப்டன் மில்லர் படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது அறிவிப்பு..கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு மற்றொரு விருது அறிவிக்கப்பட்டுள்ளது சமூக மற்றும் தேசிய நலனுக்காக எடுக்கப்படும் திரைப்படம் பிரிவில் அறிவிப்பு
-
சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது தனுஷ் இயக்கிய ராயன் படத்திற்கு அறிவிப்பு
-
‘மெய்யழகன்’ படத்திற்கு சிறந்த ஒலிக்கலவைக்கான (சிறப்பு விருது) தேசிய விருது அறிவிப்பு
-
அமரன் திரைப்படத்திற்கு சிறந்த பிண்ணனி இசைக்கான தேசிய விருது. ‘அமரன்’ படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
