சினிமாவில் இதயம் முரளி, ஆனா ஒரிஜினலா நான் அப்படி இல்ல; காதல் வாழ்க்கை பற்றி முரளி த்ரோபேக் வீடியோ

சினிமாவை பொருத்தவரை ஒரு ஹீாரோ ஹீரோயினை காதலிக்கிறார் என்றால், ஏதாவது ஒரு கட்டத்தில் அவரிடம் தன் காதலை சொல்லிவிடுவார். ஆனால் அதற்கு மாறாக படத்தின் இறுதிவரை தான் காதலித்த பெண்ணிடம் காதலை சொல்லாமலே இருந்த ஹீரோ என்றால், அது முரளி தான்.

1984-ம் ஆண்டு வெளியான பூவிலங்கு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் முரளி. தொடர்ந்து மணிவண்ணன் இயக்கத்தில் இங்கேயும் ஒரு கங்கை, மணிரத்னம் இயக்கத்தில் பகல் நிலவு, சிவாஜியுடன் மண்ணுக்குள் வைரம், புது வசந்தம், பூமணி, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, வீர தாலாட்டு, என் ஆசை ராசாவே, என் ஆசை மச்சான் என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். 

விஜயகாந்த், சிவாஜி, பார்த்திபன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள முரளி, 1991-ம் ஆண்டு வெளியான இதயம் படத்தில் மருத்துவ கல்லூரி மாணவராக நடித்திருந்தார். இந்த படத்தில், நாயகியாக நடித்த ஹீராவை காதலிக்கும் முரளி, படத்தின் இறுதிவரை அவரிடம் தனது காதலை சொல்லவே மாட்டார். கதிர் இயக்கத்தில் வெளியான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. குறிப்பாக காதலித்து அந்த காலை சொல்ல பயப்படும் ஆண்கள் மத்தியில் இந்த படம் கவனம் ஈர்த்தது. 

இந்த படம் வெளியான சமயத்தில் இருந்து தற்போதுவரை ஒரு பெண்ணை காதலிக்கும் ஆண் அவளிடம் காதலை சொல்லவில்லை என்றால், இதயம் முரளி போல் ஆகிவிடாதே உடனே சொல்லிவிடு என்று அட்வைஸ் சொல்லும் அளவுக்கு அந்த படத்தின் தாக்கம் இன்றுவரை குறையாமல் உள்ளது, கடந்த 2010-ம் ஆண்டு முரளி மகன் அதர்வா நடிப்பில் வெளியான முதல் படமான பானா காத்தாடி படத்தில் இதயம் ராஜா என்ற பெயரில் கெஸ்ட் ரோலில் முரளி நடித்திருப்பார். 

தற்போது அதர்வா இதயம் முரளி என்ற பெயரில் ஒரு படத்தில் நடித்து அந்த படமும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. படத்தில் காதலை சொல்ல பயந்த முரளி நிஜ வாழ்க்கையில் தனது மனைவியை பார்த்தவுடன், தன் மனதில் என்ன தோன்றியதோ அதை அப்படியே சொன்னதாக முரளி தனது பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த வீடியோவில், என் வாழ்க்கையே வித்தியாசமானது. சினிமாவில் வருவது போல் முரளி காதலில் தோல்வியடைந்தார். காதலை சொல்ல பயப்படுகிறார் என்று சொல்வது போல் நான் இல்லை. என் கேரக்டர் அது கிடையாது. 

முதல் நாள் என் மனைவியை (ஷோபா) பார்க்கும்போது, உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று சொல்லி கையை பிடிதம்துவிட்டேன். அதை பார்த்து அவர் ஷாக் ஆகிவிட்டார். அதன்பிறகு அவர் ஒன்றும் பேசவில்லை. எல்லோரும் பேசிவிட்டு கிளம்பிவிட்டோம் என்று முரளி கலகலப்பாக பேசியுள்ளார். 

Source link