“இந்தியாவின் எடிசன்…” – மாதவன் நடிக்கும் ‘ஜி.டி.என்’ பட ரிலீஸ் தேதி வெளியானது!

மாதவனின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் ‘ஜி.டி.என்’. இப்படத்தை கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி இயக்கியுள்ளார். இதில் ஜெயராம், சத்யராஜ், பிரியாமணி, யோகி பாபு மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தை ‘ட்ரை கலர் பிலிம்ஸ்’ மற்றும் ‘வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் ‘ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.  இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.  

இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்பட்ட ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஜி.டி.நாயுடுவாக மாதவன் நடித்துள்ளார். ஏற்கனவே, இதே பாணியில் மாதவன் நடிப்பில் உருவான ‘ராக்கெட் ட்ரி’ படம் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இதன் காரணமாக, இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.  

இந்நிலையில், ‘ஜி.டி.என்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக  அறிவித்துள்ளது படக்குழு. அதன்படி, ‘ஜி.டி.என்’ படம் ஆகஸ்ட் 7ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Source link