ஹார்முஸ் ஜலசந்திக்கு மாற்று பாதை: ரூ. 5.77 லட்சம் கோடியில் அமெரிக்கா-ஈராக் ஒப்பந்தம்

வாஷிங்டன்: கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை தவிர்க்க ஹார்முஸ் ஜலசந்திக்கு மாற்றாக புதிய திட்டத்தை கொண்டு வருவது உட்பட பல முக்கிய திட்டங்களை செயல்படுத்த, அமெரிக்க நிறுவனங்கள் ஈராக் அரசுடன் 5.77 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் மேற்காசிய நாடான ஈரான் இடையே போர் நடந்து வருவதால், உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கிடைப்பதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. உலகிற்கு தேவையான கச்சா எண்ணெயில், 20 சதவீதம் ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் கப்பல்களில் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்தப் பாதையை ஈரான் முடக்கியுள்ளதால், கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதற்கு தீர்வாக, இந்த கடல் வழிப்பாதையை நம்பியிருக்காமல் நிலத்தின் வழியே குழாய்கள் அமைத்து எண்ணெயை கொண்டு செல்ல அமெரிக்க நிறுவனங்களும், ஈராக் அரசும் முடிவு செய்துள்ளன.

அமெரிக்காவின் பிரபல எரிசக்தி நிறுவனமான ‘செவ்ரான்’ இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது. மேலும், சுகாதாரம், தகவல் தொடர்பு மற்றும் உட்கட்டமைப்பு உட்பட பல துறைகளிலும், 5.77 லட்சம் கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் இரு தரப்பும் கையெழுத்திட்டு உள்ளன.

Source link