பாலக்காடு: கேரளாவின் பாலக்காடு மருத்துவக் கல்லூரி அருகே வேனில் 100க்கும் மேற்பட்ட பெட்டிகளில்

பாலக்காடு: கேரளாவின் பாலக்காடு மருத்துவக் கல்லூரி அருகே வேனில் 100க்கும் மேற்பட்ட பெட்டிகளில் எடுத்துச்செல்லப்பட்ட ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பாலக்காடு மருத்துவக் கல்லூரி அருகே நேற்றிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த பிக்கப் வாகனம் ஒன்று போலீசாரின் சோதனைக்கு நிற்காமல் சென்றது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக அந்த வாகனத்தை துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர்.

தர்பூசணி பழங்கள் இருந்த அந்த வாகனத்தை சோதனை செய்ததில் அதிர்ச்சி காத்திருந்தது. பழங்களுக்கு கீழே ஜெலட்டின் குச்சிகளும், டெட்டனேட்டர்களும் இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ந்து போயினர். அப்போது, தப்பியோட முயன்ற ஓட்டுநர் செந்திலை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். கோவையில் இருந்து திருச்சூரில் உள்ள குவாரிகளில் பயன்படுத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

தொடர்ந்து அந்த வாகனத்தில் இருந்த சுமார் 100 பெட்டிகளில் ஜெலட்டின் குச்சிகளும், 20க்கும் மேற்பட்ட பெட்டிகளில் இருந்த டிட்டனேட்டர்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Source link