தமிழகத்தில் 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அச்சகத்துறை ஆணையராக லில்லி ஐ.ஏ.எஸ் நியமனம்

தமிழகத்தில் அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் அவ்வப்போது நடைபெற்று வரும் நிலையில், இன்று 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல்வராக பொறுப்பேற்ற விஜய், மக்களுக்காக பல திட்டங்களை அறிவித்து வருகிறார், அதேபோல் லஞ்சம் இல்லாத தமிழ்நாடு என்ற அடிப்படையில், பணியாற்றி வரும் விஜய், கடந்த வாரம் கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட, லஞ்சம் யாரும் கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று மக்களுக்கு கூறியிருந்தார். மேலும் லஞ்சம் வாங்கிய த.வெ.க நிர்வாகியும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். 

அதேபோல் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், யாரும் தவறு செய்ய கூடாது. செய்தால் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அது யாராக இருந்தாலும் சரி என்று விஜய் கூறியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனிடையே நேற்று தமிழகம் முழுவதும் வட்டாச்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டது

தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழலை உருவாக்கியது. இந்த சோதனையில் கணக்கில் வராத லட்சக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை போலவே, அரசு அதிகரிகள் பணியிட மாற்றமும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் இன்று, 2 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழக அரசின் நிர்வாகத்தில் போக்குவரத்துத் துறையின் சிறப்புச் செயலாளராக பணியாற்றி வந்த லில்லி ஐ.ஏ.எஸ், இடமாற்றம் செய்யப்பட்டு எழுதுபொருள் மற்றும் அச்சகத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் சுகுமார் ஐ.ஏ.எஸ், நகராட்சி நிர்வாகத்துறையின் இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

Source link