'டீன் ஏஜ்' வயசு… இது புதுசு

நியூஜெர்சி: உலக கோப்பை கால்பந்து பைனலில் விளையாடிய ‘டீன் ஏஜ்’ வீரர்கள் அனைவரும், தங்கள் அணிக்கு கோப்பை வென்று தந்துள்ளனர். இதனால் ஸ்பெயினின் லமின் யமால் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உலக கோப்பை கால்பந்து தொடரின் பைனலில் உலகின் ‘நம்பர்-1’ அர்ஜென்டினா, ‘நம்பர்-2’ ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதனிடையே பைனலில் ‘டீன் ஏஜ்’ வீரர்கள் சாதிப்பது தொடர் கதையாக உள்ளது தெரியவந்துள்ளது.

இதன் படி

* கடந்த 1958ல் பிரேசில் அணிக்காக 17 வயது பீலே பைனலில் களமிறங்கினார். 2 கோல் அடித்து கைகொடுக்க, பிரேசில் சாம்பியன் ஆனது.

* 1982 தொடர் பைனலில், இத்தாலி அணிக்காக 19 வயது பெர்கோமி, தற்காப்பு வீரராக மிரட்டினார். இதில் இத்தாலி அணி கோப்பை வென்றது.

* 2018ல் பிரான்ஸ் அணிக்காக 19 வயதில் பைனலில் பங்கேற்றார் எம்பாப்வே. ஒரு கோல் அடித்து உதவ, பிரான்ஸ் சாம்பியன் ஆனது.

* இம்முறை 2026ல் பைனலில் மோத உள்ள ஸ்பெயின் அணியில் லமின் யமால், குர்பாசி என இரண்டு 19 வயது வீரர்கள் களமிறங்க உள்ளனர்.

பைனலில் விளையாடிய மூன்றாவது இளம் வீரர் ஆக உள்ள யமால், அரையிறுதியில் வெற்றிக்கு உதவியது போல, மீண்டும் அசத்தலாம். மறுபக்கம் சிறந்த இளம் வீரருக்கான போட்டியில் உள்ள குர்பாசி, தற்காப்பு பகுதியில் முதுகெலும்பாக உள்ளார். பைனலில் உதவினால், ஸ்பெயின் அணி கோப்பை வெல்லும். தவிர, ‘டீன் ஏஜ்’ வீரர்கள் இடம் பெற்ற அணி, மறுபடியும் சாம்பியன் ஆனது என்ற வரலாறு தொடரலாம்.

யமால் காயமா

ஸ்பெயின் நட்சத்திர வீரர் லமின் யமால் 19. இடது தொடையில் ‘பாண்டேஜ்’ சுற்றப்பட்ட நிலையில், வழக்கமான பயிற்சியில் இவர் ஈடுபடவில்லை. இதனால் யமால் காயத்தால் அவதிப்படுவதாக செய்தி வெளியாகின. ஆனால் ‘யமால் தசைப்பிடிப்பு சரியாகி விட்டது, பைனலில் பங்கேற்பார்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link