சென்னை: சாதனைகள், கொள்கைகள் இல்லாததால் ஆபாசங்கள், அவதூறுகளை அள்ளி இறைத்துக் கொண்டு இருக்கின்றனர் என்று அதிமுகவை திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவரது பதிவு;
இரண்டு மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை? எங்கள் மேடைகளில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் சாதனைகளையும், அவற்றால் பயனடைந்தவர்கள் குறித்தும் தரவுகளோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
மறுபுறம், சொல்வதற்குச் சாதனைகளும் – செயல்படுவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சியைத் தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
