நமது நிருபர்
நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். எங்கள் பலருக்கும் உத்வேகம் அளிக்கும் மோடிக்கு நன்றி என ஸோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
அவரது பதிவு: செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகள் முதல் விண்வெளித் துறை வரை, கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் நடந்து இருக்கும் சாதனைகள் வியக்கத்தக்கது. இனி ஒவ்வொரு அடியும் இன்னும் பெரிய, துணிச்சலான அடுத்த கட்டத்திற்கு நம்மை கொண்டு செல்லும்.
ஒரு காலத்தில் கடக்கவே முடியாதவை என்று தோன்றிய தடைகள் அனைத்தும் இப்போது தகர்ந்து வருகின்றன. நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் செய்து முடிப்பதற்கான தொலைநோக்குப் பார்வையும், உறுதியும் கொண்ட ஒரு தலைவரையும், அரசையும் நாம் தேர்ந்தெடுத்ததாலேயே சாத்தியமாயின.
தலைமைத்துவம் என்பது மிக முக்கியமானது. நமக்கு முன்னால் இன்னும் நிறைய பணிகள் உள்ளன. நமது வளர்ச்சியைத் தடுக்க விரும்பும் சக்திகளை நாம் எதிர்கொள்கிறோம்; ஆயினும் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். எங்கள் பலருக்கும் உத்வேகம் அளிக்கும் மோடிக்கு நன்றி. இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
