Chennai News Live Updates: டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55-க்கும் மற்றும் சிஎன்ஜி எரிவாயு ஒரு கிலோ ரூ.97.00-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்: சென்னை குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் ரவுடி தமிழ் அழகு-வை போலீசார் சுட்டுப் பிடித்தனர். மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை கைப்பற்ற தனிப்படை போலீசார் சென்றபோது, தலைமை காவலரை கையில் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடியை சுட்டுப் பிடித்தனர். வலது கணுக்காலில் காயமடைந்த ரவுடி தமிழ் அழகு ஆம்புலன்ஸ் மூலம் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Source link