மேக் இன் இந்தியா திட்டத்துக்கு கிடைத்தது வெற்றி; ராகுல் பொய் பிரசாரத்திற்கு விழுந்தது அடி!

நமது சிறப்பு நிருபர்

‘மேக் இன் இந்தியா’ திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் செய்யும் பொய் பிரசாரம், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தனியார் ராக்கெட் விக்ரம்-1 வெற்றியால் முறியடிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் முழுமையாகத் தோல்வி அடைந்து விட்டதாகவும், இது உண்மையான உற்பத்தி (Manufacturing) அல்லாமல், வெளிநாட்டு பாகங்களை இணைக்கும் ‘அசெம்பிள் இன் இந்தியா’ (Assemble in India) என்ற பெயரிலேயே செயல்பட்டு வருவதாகவும் காங்கிரஸ் எம்பி ராகுல் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இது தொடர்பாக அவர் விமர்சிக்கும் போது இணையத்தில் நெட்டிசன்கள் காட்டாக பதிலடி கொடுப்பதும் உண்டு. தற்போது ராகுலின் பொய் பிரசாரம் மக்கள் மத்தியில் அம்பலமாகியுள்ளது. தனியார் ராக்கெட் விக்ரம்-1 திட்டத்தின் வெற்றியானது, ராகுலின் பொய் மூட்டைகளை முறியடித்துள்ளது.

நம் நாட்டிலும் விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட, மோடி அரசு சீர்திருத்தங்களை கொண்டு வந்தது. அதன்படி மத்திய அரசின், ‘இன் ஸ்பேஸ்’ நிறுவனம், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் விண்வெளி துறையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கிறது. அதன் தொடர்ச்சியாக, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனம், ‘விக்ரம் – 1’ என்ற ராக்கெட்டை முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தால் உருவாக்கியது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து, நேற்று பகல் 12:05 மணிக்கு, இந்த ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வந்தே மாதரம் என்ற வாசகத்துடன் பிரதமர் மோடியின் கையால் எழுதப்பட்ட பிரத்யேக அஞ்சல் அட்டையும் அனுப்பப்பட்டது. பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கும், ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் குழுவினருக்கும் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.

இது ‘இந்தியாவின் விண்வெளித் துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்’ என்றும், இளைஞர்களின் மிகப்பெரிய வெற்றி என்றும் அவர் பாராட்டினார். இந்த திட்டத்தின் வெற்றி ‘மேக் இன் இந்தியா’வுக்கு கிடைத்த பலனாக பார்க்கப்படுகிறது.

இந்த வெற்றியின் மூலம், சொந்தமாக ராக்கெட் ஏவும் திறன் பெற்ற உலகின் மூன்றாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இத்தகைய சரித்திர சாதனை, இத்தனை ஆண்டுகளாக ராகுல் செய்து வந்த அரசுக்கு எதிரான பொய் பிரசாரத்துக்கு முடிவு கட்டும் வகையில் அமைந்துள்ளது.

Source link