இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்க மத்திய அரசு மும்மரம் காட்டி வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக, பொதுமக்கள் தங்களது விவரங்களை இணையதளம் மூலம் தாங்களாகவே பதிவு செய்து கொள்ளும் ‘சுய கணக்கெடுப்பு வசதி ஜூலை 17 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வசதி ஜூலை 31 வரை செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சுய கணக்கெடுப்பு
தற்போது நடைபெற இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாடு முழுவதும் இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . முதற்கட்டமாக, வீடுகள் மற்றும் வீட்டு வசதிகள் தொடர்பான கணக்கெடுப்பு ஏப்ரல் முதல் செப்டம்பர் 2026 வரை பல்வேறு மாநிலங்களில் நடைபெறுகிறது. தமிழகத்தில் இந்தப் பணி ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெறவுள்ளது.
Work ஆகுமா பொது வேட்பாளர் Concept? திமுக போடும் கணக்கு Discussed!
இந்தக் கணக்கெடுப்பில் வீடுகளின் நிலை, குடிநீர் வசதி, மின்சாரம், கழிவறை, சுகாதார வசதிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன. இதற்கு முன்பாகவே பொதுமக்கள் தங்களது தகவல்களை இணையதளம் மூலம் நேரடியாக பதிவு செய்யும் வசதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 2027 பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் இரண்டாவது கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடும்ப உறுப்பினர்களின் கல்வி, தொழில், இடம்பெயர்வு, சாதிவாரி விவரங்கள் உள்ளிட்ட சமூக மற்றும் பொருளாதார தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. இந்த கணக்கெடுப்பு நாட்டின் எதிர்கால திட்டமிடலுக்கு முக்கியமான தரவுகளை வழங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைனில் விவரங்கள் பதிவு செய்வது எப்படி?
1. https://se.census.gov.in ) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று, மாநிலம் என்ற இடத்தில் தமிழ்நாட்டை தேர்வு செய்ய வேண்டும். பின்னர், ‘கேப்ட்சா’ குறியீட்டை பதிவு செய்ய வேண்டும்.
2. செல்போன் எண்ணை குறிப்பிட வேண்டும். தேவைப் பட்டால் இணையதள முகவரியையும் குறிப்பிடலாம்.
3. பதிவு செய்யும் வசதி 16மொழிகளில் இடம் பெற்றிருக்கும். இதில் தங்களுக்கு தெரிந்த மொழிகளை தேர்வு செய்தால், பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு ‘ஓ.டி.பி.’ எண் வரும். அதன் மூலம் சுய கணக்கெடுப்பு பணியை தொடரலாம்.
4. எந்த மாவட்டம், கிராமம்/நகரம்/ பின்கோடு எண்ணை தெரிவிக்க வேண்டும்.
5. இந்த விவரங்களை பதிவு செய்தவுடன் கூகுள் வரைப்ப டம் (மேப்) மூலம் தங்களுடைய வீடு அமைந்துள்ள இடம் உறுதி செய்யப்படும்.
6. வீட்டு வசதிகள் குறித்த 33 கேள்விகள் வரிசையாக வரும். இந்த கேள்விகளை நிரப்புவதில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் கேள்விகளை கேட்டு விளக்கங்கள் பெற முடியும். அதன்பின் னர் உரிய பதில்களை அளிக்கலாம்.
7. தாங்கள் அளித்த பதில்கள் சரியாக இருக்கிறதா? என் பதை பார்வையிட்டு உறுதி செய்யலாம்.
8.இறுதியாக விவரங்களை சமர்பித்தவுடன் அவை சர்வரில் விவரங்கள் பதிவாகி விடும். இதனை உறுதி செய்யும் வகையில் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு 11 இலக்க எண் குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும்.
9. வீடுகளுக்கு நேரடியாக கணக்கெடுக்கவரும் பணியா ளர்களிடம் இந்த எண்ணை காண்பிக்க வேண்டும். அவர் கள் இந்த எண் மூலம் தாங் கள் பதிவு செய்த விவரங்கள் சரியாக இருக்கிறதா? என் பதை ஆய்வு செய்த பின்னர், கணக்கெடுப்பை உறுதி செய் வார்கள்.
