10 தேசிய விருதுகளை தமிழ்த் திரையுலகம் வென்றது பெருமைக்குரியது; முதல்வர் விஜய்

சென்னை: பல்வேறு பிரிவுகளில் 10 தேசிய திரைப்பட விருதுகளை வென்று சாதனை படைத்துள்ள தமிழ்த் திரையுலக கலைஞர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை: 2024ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களுக்கான 72வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படத்திற்குச் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதும்,

‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்குத் தேசிய சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழுமியங்களை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருது மற்றும் அப்படத்தில் நடித்த தனுஷ்க்குச் சிறப்புப் பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதும்,

‘அமரன்’ திரைப்படத்திற்காக ராஜ்குமார் பெரியசாமிக்குச் சிறந்த இயக்குநருக்கான விருது, ஆர்.கலைவாணனுக்குச் சிறந்த படத்தொகுப்புக்கான விருது மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்குச் சிறந்த பின்னணி இசைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘மகாராஜா’ திரைப்படத்திற்காக அனல் அரசுக்குச் சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருது மற்றும் அப்படத்தில் நடித்த சாச்சனா நமிதாஸ்க்குச் சிறந்த துணை நடிகை விருதும்,

‘மெய்யழகன்’ திரைப்படத்திற்காக சுரேனுக்குச் சிறப்புப் பிரிவில் சிறந்த ஒலிக்கலவைக்கான விருதும், ‘ப்ளூ’ குறும்படத்திற்காக டி. எஸ். ஹரிஹா சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதும் சுதனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

10 தேசிய திரைப்பட விருதுகளைத் தமிழ்த் திரையுலகம் வென்றுள்ளது பெருமைக்குரியது. வருங்காலங்களில் தமிழ்த் திரையுலகம் மேலும் பல விருதுகளைப் பெற்றிடவும் வாழ்த்துக்கள். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

Source link