நாளை பேரணியை வெற்றி பெறச்செய்யுங்கள்; மருத்துவமனையில் இருந்து சோனம் வாங்சுக் வேண்டுகோள்

புதுடில்லி: நாளை (ஜூலை 20) பார்லிமென்டை நோக்கிய பேரணியை மாபெரும் வெற்றியடையச் செய்யுங்கள் என சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டில்லியில் உண்ணாவிரதம் இருந்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நீண்ட கால உண்​ணா​விரதம் மேற்​கொண்​டது மற்​றும் நீர்ச்​சத்து குறை​பாடு காரண​மாக சோனம் வாங்​சுக் பலவீன​மாக உள்​ளார். தற்​போது அவரது உடல்​நிலை சீராக உள்​ளது என மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தற்போது சோனம் வாங்சுக், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே, காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் துவங்கி உள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து சோனம் வாங்சுக் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்; நாளை (ஜூலை 20) பார்லிமென்டை நோக்கிய பேரணியை மாபெரும் வெற்றியடையச் செய்யுங்கள். இவ்வாறு சோனம் வாங்சுக் கூறியுள்ளார். சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற கோரி டில்லி ஐகோர்ட்டில் அவரது மனைவி கீதாஞ்சலி மனு தாக்கல் செய்துள்ளார்.

Source link