ரூ.26 லட்சம் நாசமா போச்சு: இந்தியர்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்ட கனடா; நடுத் தெருவில் நிற்கும் மாணவர்கள்

கனடாவின் கல்கரி (Calgary) நகரில் உள்ள ‘போர்ட்டேஜ் கல்லூரி’ (Portage College) மற்றும் ‘கனடியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆஸ்டியோபதி தெரபி’ (Canadian Institute of Osteopathic Therapy) மூலமாக பிசினஸ் மேனேஜ்மென்ட் டிப்ளமோ படிப்பை முடித்த ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்கள், தற்போது கனடா அரசாங்கம் ‘போஸ்ட்-கிராஜுவேஷன் ஒர்க் பெர்மிட்’ (Post-graduation work permit – PGWP) வழங்க மறுத்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் நடுத்தெருவில் தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இந்திய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்னிலேண்ட் ஃபாரின்ல இல்ல; இந்தியாவில் தான் இருக்கு… எங்க இருக்கு தெரியுமா?

என்ன நடந்தது? 

கனடா இமிக்ரேஷன் துறை திடீரென தங்களது விதிகளில் மாற்றம் செய்து, ‘நான்-கிரெடிட்’ (Non-credit) திட்டங்களை இந்த ஒர்க் பெர்மிட்டிற்கு தகுதியற்றதாக மாற்றிவிட்டதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இந்த விதிமுறை மாற்றத்திற்கு முன்பே தாங்கள் ஒர்க் பெர்மிட்டிற்கு விண்ணப்பித்துவிட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், கனடாவின் குடியுரிமைத் துறையான ஐ.ஆர்.சி.சி, தங்களது விதிகளில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை என்று மறுத்துள்ளது. அதே சமயம், இதே கல்வி நிறுவனத்தில் படித்த சில மாணவர்களுக்கு ஒர்க் பெர்மிட் கிடைத்துள்ளதும் இந்த விவகாரத்தைக் குழப்பமடையச் செய்துள்ளது.

26 லட்ச ரூபாய் போச்சு – மாணவர்களின் மனக் குமுறல்

ஜஸ்பிந்தர் கவுர் என்ற மாணாவி, “எனது தந்தை தனது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் எனக்காகச் செலவழித்தார். எனது இரண்டு ஆண்டு படிப்பை முடித்த பிறகு, என்னால் கனடாவில் வேலை செய்து அனுபவத்தைப் பெற முடியும் என்று நினைத்தேன். இந்த இரண்டு வருடப் படிப்பிற்கு மட்டும் கட்டணமாக 32,000 டாலர்கள், இந்திய மதிப்பில் சுமார் ரூ.26 லட்சத்திற்கும் மேல் செலவாகியுள்ளது. இதில் தங்குமிடம் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் தனி என்று தெரிவித்துள்ளார்.

முகுல் ரானா என்ற மாணவர், “ஒர்க் பெர்மிட் மறுக்கப்பட்ட மாணவர்கள் தற்போது வேலை செய்ய முடியாமல் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையாகப் போராடி வருகின்றனர். இது ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம். இது வெறும் நிர்வாகப் பிரச்சனை அல்ல, ஒரு மனிதநேய நெருக்கடி” என்று ஆதங்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் கல்லூரியின் பங்கு குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டபோது, கல்லூரி நிர்வாகம் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. கல்கரியைச் சேர்ந்த இமிக்ரேஷன் வழக்கறிஞர் லாரா-அன்னே கவுல்டிங் கூறுகையில், தனது அலுவலகத்தை மட்டும் 200-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்புகொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஏன் இந்த ‘ஒர்க் பெர்மிட்’ இவ்வளவு முக்கியம்?

கனடா அரசாங்கத்தால் வழங்கப்படும் இந்த ‘போஸ்ட்- கிராஜுவேஷன் ஒர்க் பெர்மிட்’ என்பது ஒரு ஓபன் ஒர்க் பெர்மிட் ஆகும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் தகுதியான படிப்பை முடிக்கும் சர்வதேச மாணவர்கள் கனடாவில் தங்கி வேலை செய்ய இது அனுமதிக்கிறது. இந்த ஒர்க் பெர்மிட்டை புதுப்பிக்க முடியாது என்றாலும், இதன் மூலம் கிடைக்கும் வேலை அனுபவத்தை வைத்து மாணவர்கள் எளிதாகக் கனடாவின் நிரந்தரக் குடியுரிமையைப் பெற முடியும். தற்போது அதுதான் கேள்விக்குறியாகியுள்ளது.

Source link