கோல்கட்டா: உலகின் மிக பெரிய தயிர் உற்பத்தி ஆலை கோல்கட்டாவில் அமைய இருக்கிறது.
அமுல் நிறுவனமானது மேற்கு வங்கத்தில் உள்ள ஹவுரா உணவு பூங்காவில் 700 கோடி ருபாய் முதலீட்டில் புதிய தயிர் உற்பத்தி ஆலை ஒன்றை அமைக்கிறது. இந்த புதிய திட்டத்தை மத்திய உள்துறை அமித் ஷா அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டத்திற்காக 15 ஏக்கர் நிலம் அமுல் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆலையில் ஒவ்வொரு நாளும் 1000 மெட்ரிக் டன் அளவில் தயிர் மற்றும் புளித்த பால் பொருட்கள் தயாரிக்கப்பட உள்ளது.
மேலும் தினமும் 10 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தி ஒரு லிட்டர் ஐஸ்கிரீம், 20 மெட்ரிக் டன் பனீர், தலா 10 மெட்ரிக் டன் நெய் மற்றும் இனிப்புகள், 2.5 லட்சம் பாக்கெட்டுகள் சுவையூட்டப்பட்ட பால் ஆகியவை உற்பத்தி செய்யப்படும்.
மேற்கு வங்கத்தில் உள்ள அமுல் கூட்டுறவு நிறுவனத்தில் தற்போது 30 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் உள்பட 1.25 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் உறுப்பினர்களான இணைந்துள்ளனர்.
