கோல்டன் பூட் யாருக்கு? மெஸ்ஸி – எம்பாப்பே இடையே அனல் பறக்கும் போட்டி

வாஷிங்டன்: பிபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தத் தொடரின் மிக உயரிய விருதான ‘கோல்டன் பூட்’ விருதை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு, கால்பந்து ரசிகர்களிடையே உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

உலக கோப்பை கால்பந்து தொடரின் பைனலில், அர்ஜென்டினா – ஸ்பெயின் அணிகள் இன்று பலப்பரிட்சை நடத்த உள்ளன. இதில் அர்ஜென்டினா வென்றால், தொடர்ந்து இருமுறை உலக கோப்பையை வென்று சாதனை படைக்கும். தற்போதைய நிலவரப்படி, அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி மற்றும் பிரான்ஸ் அணியின் இளம் புயல் கிலியன் எம்பாப்பே ஆகிய இருவருக்கும் இடையே, ‘கோல்டன் பூட்’ வெல்வது யார் என்று கடும் போட்டி நிலவுகிறது.

மெஸ்ஸியின் ‘மேஜிக்’ கணக்கு:

​நடப்புத் தொடரில் இதுவரை 8 கோல்களையும், 4 அசிஸ்ட்களையும் (கோல் அடிக்க உதவுதல்) செய்து அசத்தியுள்ளார் மெஸ்ஸி. இறுதிப்போட்டியில் அவர் கோல்டன் பூட் விருதை வெல்ல இரண்டு வாய்ப்புகள் உள்ளன:

​இறுதிப்போட்டியில் மெஸ்ஸி 3 கோல்கள் (ஹாட்ரிக்) அடிக்க வேண்டும் அல்லது, 2 கோல்கள் அடிப்பதோடு, சக வீரர் கோல் அடிக்க 1 அசிஸ்ட் செய்ய வேண்டும்.

​எம்பாப்பேவின் ‘இமாலய’ சாதனை:

​மறுபுறம், பிரான்ஸ் அணியின் எம்பாப்பே 10 கோல்கள் மற்றும் 4 அசிஸ்ட்களுடன் கோல்டன் பூட் ரேஸ்சில் முன்னிலையில் உள்ளார். மெஸ்ஸி இறுதிப்போட்டியில் போல் அடிக்க தவறினால், கோல்டன் பூட் விருது தானாகவே எம்பாப்பேவின் கைவசமாகும்.

​உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்ற போட்டி ஒருபுறமிருக்க, தனிநபர் சாதனையான கோல்டன் பூட்டை வெல்லப் போவது மெஸ்ஸியா அல்லது எம்பாப்பேவா என்ற அனல் பறக்கும் விவாதம் தற்போதே சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.

Source link