நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம்: அமைச்சர் அதிரடியால் அலுவலர் சஸ்பெண்ட்

கடலுார்: வடலுார் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய எழுத்தர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தமிழக உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் கடலுார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு பணிகளில் ஈடுபட்டார். வடலுார் அருகே மருவாய் கிராமத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் ஆய்வு செய்தார்.

அப்போது ஏற்கனவே நெல் கொள்முதல் செய்யப்பட்ட பட்டியலில் இருந்த விவசாயிகளின் மொபைல் போன் எண்ணை கொண்டு அமைச்சர் அந்த விவசாயியை தொடர்பு கொண்டு கேட்டார். அதற்கு அந்த விவசாயி ஒரு மூட்டை நெல் விற்பனை செய்வதற்காக கொள்முதல் நிலையத்தில் 50 ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

அதையே ஆதாரமாகக் கொண்டு அமைச்சர் வெங்கடரமணன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எழுத்தர் வேல்முருகனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Source link