தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சீருடை மாற்றம் செய்வது குறித்து முதலமைச்சர் விஜய் விரைவில் அறிவிப்பார் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார் இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மதுரை மாவட்டம் மேலூர் சமனபடுகை மற்றும் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகள் குறித்து தொல்லியல் துறை அமைச்சரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான ராஜ்மோகன் என்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மேலூர் அருகே உள்ள மாங்குளம் மீனாட்சிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சமண படுக்கை மலைக்கு சென்றார்.
கீழடியில் அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு
அங்கு பாறைகளில் பொறிக்கப்பட்டுள்ள தமிழ் எழுத்துக்கள் மற்றும் பிராமினி கல்வெட்டுகள் குறித்து நேரில் ஆய்வு செய்து வரலாறுகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் இந்த ஆய்வை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் கீழடிக்கு சென்ற அமைச்சர் ராஜ்மோகன் சிவகங்கை மாவட்டம் கீழடியில் பதினொன்றாம் கட்ட அகழாய்வு பணிகளை நேரில் பார்வையிட்டார்.
சமண படுக்கை பிராமி கல்வெட்டுகள்
அகழாய்வுக் குழிகளுக்குள் இறங்கிச் சென்ற அமைச்சர் ராஜ்மோஜன் அங்கு கண்டறியப்பட்டுள்ள செங்கல் கட்டுமானப் பணிகளை உற்று நோக்கினார். அப்போது, இந்த செங்கல் அமைப்புகளின் பழமை மற்றும் சிறப்புகள் குறித்து தொல்லியல் துறை ஆய்வாளர் ரமேஷ் அமைச்சருக்கு விரிவாக விளக்கிக் கூறினார்.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
இதனைத் தொடர்ந்து, அங்குள்ள திறந்தவெளி அருங்காட்சியகத்திற்குச் சென்ற அமைச்சர், பழங்காலக் கண்ணாடி மணிகள் மற்றும் கீழடி மனிதர்கள் அக்காலத்தில் எவ்வாறு உலோகத் தொழிலில் ஈடுபட்டார்கள் என்பது குறித்த வரலாற்றுத் தகவல்களை அதிகாரிகளிடம் கேட்டு அறிந்துகொண்டார். அரசுப் பள்ளிகள் என்பவை நம் கண் போன்றவை. தற்போதைய சூழலில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை இன்னும் அதிகமாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
தமிழக அரசு பள்ளி சீருடை மாற்றம்
எந்தக் காரணத்தைக் கொண்டும் அரசுப் பள்ளிகளை மூடுவதை இந்த அரசு அனுமதிக்காது .காலத்திற்கு ஏற்ப பள்ளிகளில் இப்போது பல மாற்றங்கள் வந்துவிட்டன. வகுப்பறைகளில் இருந்த பழைய கரும்பலகைகள் மாறி, இன்றைக்கு நவீன ஸ்மார்ட் போர்டுகள் (Smart boards) வந்துவிட்டன. கல்வி முறையில் இவ்வளவு விஷயங்கள் மாறும்போது, பள்ளி மாணவர்களின் சீருடைகளையும் (Uniform) மாற்றியமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் தலைமையில் நடந்த பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் நான் கோரிக்கை விடுத்துள்ளேன். இதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் விரைவில் நல்லதொரு அறிவிப்பை வெளியிடுவார்” என்று தெரிவித்தார்.
