சென்னை திரும்பிய மு.க.ஸ்டாலின்; உற்சாக வரவேற்பளித்த திமுக தொண்டர்கள்!

லண்டன் பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பிய மு.க.ஸ்டாலினுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தன்னுடைய பேரன் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக கடந்த ஜூலை 4ஆம் தேதி முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் லண்டன் சென்றிருந்தார். லண்டனில் இருந்தாலும் அங்கு இருந்துகொண்டே மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், நாடாளுமன்ற எம்.பிக்களுடன் ஆலோசனைக் கூட்டம் என கட்சிப் பணிகளில் சுறுசுறுப்பாக இருந்தார்.

இந்த நிலையில், லண்டன் பயணத்தை முடித்துவிட்டு இன்று (19-07-26) அவர் சென்னை விமான நிலையத்துக்கு வருகை தந்தார். அப்போது திமுக தொண்டர்கள் ஏராளமானோர் கூடி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்த வரவேற்பை புண்சிரிப்போடு ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், தனது காரில் ஏறி வீட்டுக்குச் சென்றார். 

Source link