மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட விழாங்குடி பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முகாமை தொடங்கி வைப்பதற்காக தவெகவின் மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ தங்கபாண்டியன் அங்கு தனது காரில் சென்றார்.
அப்போது தொண்டர்கள் சிலர், எம்.எல்.ஏ தங்கபாண்டியனின் காரை மறித்து, ‘உங்களுக்காக இந்த தேர்தலில் உழைத்திருக்கிறோம், விஜய்க்கு நீங்கள் எப்படியோ அதேபோல் உங்களுக்கு நாங்கள் உழைத்திருக்கிறோம், மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு எப்படி நீங்கள் உடனடியாக பதவி கொடுக்கலாம்?’ எனத் தொடர்ந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர், செல்போனில் வீடியோ எடுக்கக்கூடாது எனக் கேட்டுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து, தங்களுக்கு பதவி கொடுக்க வேண்டும் எனத் தொடர்ந்து அவரிடம் தொண்டர்கள் வற்புறுத்தினர். உடனே அங்கிருந்தவர்கள், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து எம்.எல்.ஏ தங்கபாண்டியன் அங்கிருந்து கிளம்பி சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
