கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி தற்காலிக மூடல் – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

நாமக்கல்,

நாமக்கல்லின் முக்கியமான அடையாளம் கொல்லிமலை. 70 கொண்டை ஊசி வளைவுகளின் பயணத்தை அனுபவிக்க, தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கு குவிகின்றனர்.

சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகள் வரும்போது சோளக்காடு அருகே உள்ள நம் அருவி, எட்டுக்கை அம்மன், வரலாற்று புகழ்வாய்ந்த அரப்பளீஸ்வரர் கோவில், தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கின்றனர். அத்துடன் மாசிலா அருவி மற்றும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வார்கள்.

தற்காலிக மூடல்

இந்த நிலையில் ஆகாயங்கை நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து இல்லாத காரணத்தால் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. சிறுவர் பூங்காவும் தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஞாயிறுக்கிழமை விடுமுறை நாளான இன்று கொல்லிமலைக்கு வந்த சுற்றுழா பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Source link