மதுரை: ”முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க.,வின் ‘காமராஜர் ஆட்சி’ ஐந்து ஆண்டுகள் தொடர வேண்டும்,” என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.
மதுரையில் உள்ள ஒரு கல்லுாரியில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில், அவர் பேசுகையில், “காமராஜரின் 9 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் லஞ்சமே கிடையாது. புதிதாக பொறுப்பேற்ற த.வெ.க., ஆட்சியில் பத்திரப்பதிவு அலுவலகம் முதல் தனியார் உதவி பெறும் பள்ளிகள், அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம், இடமாறுதல் வரை லஞ்சம் தவிர்க்கப்பட்டுள்ளது.
“இன்னும் பல துறைகளில் லஞ்சம் தவிர்க்கப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை முதல்வர் விஜய் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் நடைபெறும், ஊழல் இல்லாத இந்த ‘காமராஜர் ஆட்சி’, ஐந்து ஆண்டுகள் தொடர வேண்டும்” என்றார்.
தமிழக காங்., தலைவர் மாணிக்கம் தாகூர் பேசுகையில், ”காமராஜர் வாழ்நாள் முழுவதும் மாணவர்களின் கல்விக்காக உழைத்தார். தமிழகத்தில் ‘காமராஜர் மாடல்’ அரசை யாராலும் கொண்டு வர இயலாத நிலையில், தற்போது முதல்வர் விஜய் கொண்டு வந்திருப்பது, நம்பிக்கை அளிக்கிறது,” என்றார். முன்னதாக ‘லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்’ என்ற நோக்கில் கல்லுாரி மைதானத்தில் 2500 மாணவர்கள் காமராஜரின் உருவத்தில் அணிவகுத்து நின்றனர்.
வீடியோ பார்க்க…
மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில் முதல்வர் விஜய்க்கு சிதம்பரம் பாராட்டு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
முழு உரையை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்https://www.youtube.com/live/DCJoeXxi67g?si=Mau8Zg-hWEJKq_mb
