காசிமேடு துறைமுகத்தில் அமோனியா வாயு கசிவு; மீண்டும் பரபரப்பு!

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைபேர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த ஜூன் 21ஆம் தேதி திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த வாயுக் கசிவு விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள தனியார் ஐஸ் தொழிற்சாலையில் இன்று (19-07-26) இரவு திடீரென சிறிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த ராயபுரம் தீயணைப்புத் துறையினர் உடனடியாக அங்கு வந்து அமோனியா கசிவை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து காவல்துறையினர் அங்கு வந்து தடுப்பு வேலிகள் அமைத்து மீனவர்கள் யாரும் செல்ல முடியாத அளவுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த கசிவு பகல் நேரத்தில் நடந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். இரவு நேரத்தில் என்பதாலும் பெருமளவு ஆட்கள் நடமாட்டம் மிக குறைவாக இருந்ததாலும்  விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. 

Source link