இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் கலந்து கொண்டு கையெழுத்துப் போட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். அமைச்சர் கையெழுத்துப் போட்டதைப் பார்த்ததும் அங்கு நின்ற தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர். என்ன முனுமுனுப்பு என்று கேட்ட போது, அமைச்சர் முகமது பர்வேஸ் அப்பா ஜாபர் அலி ஊரறிந்தவர்.
ஆனால் அமைச்சர் கையெழுத்துப் போடும் போது ஜ.முகமது பர்வேஸா் என்று எழுதியுள்ளார். ஜாபர் அலிக்கு, ‘ஜா’ தானே முதல் எழுத்து. ஆனால் அமைச்சர், ‘ஜ’ என்று முன்னெழுத்து போட்டுள்ளார். அமைச்சரே இப்படி தப்பும் தவறுமாக கையெழுத்து போடலாமா? அதான் என்றனர்.
மேலும், சிலர் அமைச்சர் வழக்கமாக ‘J’ இன்சியல் போட்டு இங்கிலீஸ்ல தான் கையெழுத்து போடுவார். ஆனால் இன்று தமிழில் கையெழுத்து போடலாம்னு எழுதும் போது சிறு தவறு நடந்துவிட்டது என்றனர். அதுக்காக அப்பா பெயருக்கான முன்னெழுத்தையா தவறா போடுவாங்க என்ற முனுனுப்பு இன்று வரை கேட்கிறது.
