இளைஞர்களுக்கு வேலை திட்டம் சீரமைக்கிறது தமிழக அரசு

சென்னை: வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், வர்த்தகம் சார்ந்த தொழில் மட்டுமின்றி, உற்பத்தி, சேவை தொழில்கள் தொடங்கவும் கடன் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் படித்த வேலையில்லா இளைஞர்கள் சுயதொழில் தொடங்க, வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்துகிறது.

இத்திட்டத்தின் கீழ், எட்டாம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு, வர்த்தகம் சார்ந்த தொழில் தொடங்க, 15 லட்சம் ரூபாய் வரை வங்கிகளில் கடனுதவி வழங்கப்படுகிறது.

இதற்கு, 25 சதவீதம் அதிகபட்சம், 3.75 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. தற்போது, இத்திட்டத்தை மறுசீரமைக்க, அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, வர்த்தகம் மட்டுமின்றி, உற்பத்தி மற்றும் சேவை துறைகளை சார்ந்த தொழில் தொடங்கவும் கடனுதவி வழங்கப்பட உள்ளது.

மேலும், கடன் தொகை, 15 லட்சம் ரூபாயில் இருந்து, 25 லட்சம் ரூபாயாக அதிகரிப்பதுடன், அதற்கு ஏற்ப மானியமும் உயர்த்தப்பட உள்ளது.

கடந்த, 2022 – 23ல், 2,612 பேருக்கு, 25.27 கோடி ரூபாய்; 2023 – 24ல், 2,538 பேருக்கு, 28 கோடி ரூபாய்; 2024 – 25ல், 3,126 பேருக்கு, 43.15 கோடி ரூபாய்; 2025 – 26ல், 3,200 பேருக்கு, 45 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

Source link