மின் கட்டண உயர்வு: தவெக அரசின் விளக்கம்!

பொதுவாக பொதுமக்களுக்கு கணக்கீடு எவ்வாறு செய்யப்படுகிறது என்பதில் குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில், மின் கட்டணம் அதிகரித்திருப்பது குறித்து தமிழ்நாடு மின்வாரிய நெல்லை மண்டல தலைமை பொறியாளர் விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் செயல்முறைகளில் ஏற்பட்ட குளறுபாடுகள் காரணமாக, சில இடங்களில் மின் நுகர்வோருக்கு தவறான மற்றும் அதிகப்படியான கட்டணம் பதிவாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மீட்டர் கணக்கீடு, பில்லிங் செயல்முறையில் குறைபாடுகளால் சில இடங்களில் தவறான மற்றும் அதிக கட்டணம் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது.

மின்வாரிய அதிகாரிகளால் அடிப்படை களஆய்வு முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால்தான் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது.

மேலும் பழுதடைந்த மீட்டரின் மின்அளவுகளில் இருக்கும் பிரச்சனை தொடக்க நிலையிலேயே கண்டறியப்படவில்லை. இதனால் தான் மீட்டர்கள் மற்றும் பில்லிங் செயல்முறைகளில் குறைபாடுகள் ஏற்பட்டது. களஆய்வு அதிகாரிகள் தங்களின் கடமைகளை முறையாக செய்திருந்தால் பிரச்சனைகளை தவிர்த்திருக்க முடியும்.

Source link