வாஷிங்டன்: அமெரிக்கத் துணை அதிபர் வேன்ஸ், உஷா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே இவான், 9, விவேக், 6, மிராபெல்,4, என 3 குழந்தைகள் உள்ளனர்.
அமெரிக்கா துணை அதிபராக ஜே.டி.வேன்ஸ், 40, பதவி ஏற்றதை தொடர்ந்து அவரது மனைவி உஷா வேன்ஸ் அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி ஆகியுள்ளார். உஷா வேன்ஸ், பெற்றோர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள். 2014ம் ஆண்டில் ஜே.டி.வேன்சை உஷா திருமணம் செய்து கொண்டார்.
துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் இந்தியாவின் மருமகன் என்பதால் இந்தியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது. தற்போது இந்த தம்பதிக்கு 4வது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: எங்கள் ஆண் குழந்தை அலெக் நீல் வேன்ஸ் பிறந்தை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.
உஷாவும், குழந்தையும், மகழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள். எங்கள் பிள்ளைகள் தங்கள் தம்பியை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்கள். வெள்ளை மாளிகை மருத்துவ குழுவினருக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே இவான், 9, விவேக், 6, மிராபெல்,4, என 3 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
