Chennai News Live Updates: முதல்வர் குறித்து அவதூறு பேச்சு

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55-க்கும் மற்றும் சிஎன்ஜி எரிவாயு ஒரு கிலோ ரூ.97.00-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

த.வெ.க.வுடன் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் – ஜி.கே.வாசன்

த.வெ.க.வுடன் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும்போது அதனை தெரிவிப்போம். புதிதாக அமைந்துள்ள அரசுக்கு கால அவகாசம் தேவை. த.வெ.க.வின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை வரவேற்கிறோம் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

லண்டன் பயணம் முடிந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்

மு.க.ஸ்டாலினின் பேரனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் மகனுமான இன்பன் பட்டமளிப்பு விழாவிற்கு குடும்பத்தோடு திமுக தலைவர்கள் லண்டனுக்கு சென்றிருந்தனர். கடந்த ஜூலை 3-ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் லண்டன் புறப்பட்ட நிலையில், பட்டமளிப்பு விழா முடிந்த பிறகு அங்கேயே சில நாட்கள் ஓய்வும் எடுத்தார். இந்த வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு திட்டமிட்டபடி இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்த நிலையில், தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் காலையிலேயே திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  • Jul 20, 2026 07:58 IST

    விளாத்திக்குளம் தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது

    முதல்வர் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய விளாத்திக்குளம் தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Source link