19 நாட்கள் அனல் பறக்கும் நாடாளுமன்றம்: என்னென்ன மசோதாக்கள் தாக்கல்? அமித்ஷா வைத்திருக்கு மாஸ்டர் பிளான்? – ​19 day parliament session key bills and amit shahs master plan ​​

19 நாட்கள் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. மேகதாது, நீட் உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பத் தயாராகும் நிலையில், ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு சட்டபூர்வ பாதுகாப்பு வழங்கும் அமித்ஷாவின் முக்கிய மசோதா உள்ளிட்ட பல்வேறு சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 20) தொடங்குகிறது. நாட்டில் பல்வேறு அரசியல், சட்ட மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் நிலவி வரும் சூழலில், இந்தக் கூட்டத்தொடர் அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை எழுப்பத் திட்டமிட்டுள்ள நிலையில், முக்கிய மசோதாக்களையும் மத்திய அரசு தாக்கல் செய்யத் தயாராகியுள்ளது.

எதிர்க்கட்சிகள் என்ன செய்யப் போகின்றன ?

மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு பிரச்சினைகளை முன்வைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மேகதாது அணைத்திட்டம், நீட் தேர்வு விவகாரம்,அயோத்தி ராமர் கோயில் உண்டியல் ஊழல் தொடர்பான வழக்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கூட்டத்தொடரின் இரு அவைகளிலும் காரசாரமான விவாதங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.

அமித்ஷா வைத்திருக்கும் பிளான்

இந்த அரசியல் சூழலில், மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே தேசிய கௌரவத்திற்கு அவமதிப்பு தடுப்பு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்ய உள்ளார். மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ள இந்த மசோதாவின் மூலம், ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு சட்டபூர்வ பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பது குற்றமாகக் கருதப்பட்டு, அதற்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த மசோதா அரசியல் மற்றும் சட்ட ரீதியாக முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேறு என்னென்ன மசோதாக்கள் தாக்கல் ஆகின்றன?

இன்று தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை, மொத்தம் 19 நாட்கள் நடைபெற உள்ளது. இந்தக் காலகட்டத்தில் பல முக்கிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது.

18-ம் தேதி கூடும் சட்டமன்றம் உதயநிதி போடும் PLAN கட்சிக்குள் ego பிரச்சனை!

அவற்றில் முக்கியமானவை:
தேசிய கௌரவத்திற்கு அவமதிப்பு தடுப்பு மசோதா , 2026 பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதா வருமான வரி திருத்த மசோதா உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் திருத்த மசோதா சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) மேம்பாட்டு மசோதாஇந்த மசோதாக்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ள முக்கிய அரசியல் மற்றும் மக்கள் நலப் பிரச்சினைகளுக்கு மத்திய அரசு எவ்வாறு பதிலளிக்கிறது என்பதும் இந்த மழைக்கால கூட்டத்தொடரின் முக்கிய அம்சமாக இருக்கும்.

Source link