CM Vijay News Live Updates: முதல்வர் குறித்து பேசிய விவகாரம்

த.வெ.க.வுடன் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் – ஜி.கே.வாசன்

த.வெ.க.வுடன் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும்போது அதனை தெரிவிப்போம். புதிதாக அமைந்துள்ள அரசுக்கு கால அவகாசம் தேவை. த.வெ.க.வின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை வரவேற்கிறோம் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

“விஜய் மாதிரி வேறு எந்த முதலமைச்சரும் இதுவரை கூறியது இல்ல”

ராயப்பேட்டையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்து 2 மாதங்கள் கூட நிறைவடையவில்லை. 2 மாதத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை பொருத்தவரை மக்கள் பாராட்டக்கூடிய காரியங்கள் தொடர்ந்து நடக்கின்றன. ஊழல் இல்லாத ஆட்சி முழுவதும் வந்துவிட்டதா என்று உறுதிமொழி கொடுக்க முடியாது. ஆனால் ஊழல் இல்லாத ஆட்சி கொடுப்பேன் என்று ஒரு முதலமைச்சர் சொல்வது போல், இதுவரை யாரும் சொன்னதில்லை என்பதுதான் முக்கியம். ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம் என்றும் மிகத் தெளிவாக வெளிப்படையாக சொன்ன முதலமைச்சரை இப்போதுதான் நாங்கள் பார்க்கிறோம் என்றார்.

மக்கள் வலியை உணர்ந்து ஆட்சி செய்பவர் முதல்வர் விஜய்: அமைச்சர் அருண்ராஜ்

மக்கள் வலியை உணர்ந்து ஆட்சி செய்பவர்தான் முதல்வர் விஜய் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “மக்களின் துயரங்களையும் தேவைகளையும் புரிந்துகொண்டு செயல்படும் தலைமையைத்தான் மக்கள் தேர்வு செய்துள்ளனர். லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்கியதுடன், கண்ணியமிக்க பொறுப்பையும் இந்த அரசிடம் ஒப்படைத்துள்ளனர்” என்று கூறினார்.

  • Jul 20, 2026 10:08 IST

    முதல்வர் குறித்து பேசிய விவகாரம் – தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது

    விளாத்திகுளம் தொகுதியைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், முதல்வரை விமர்சித்ததாக கூறப்படும் விவகாரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, கைது செய்யப்பட்டதற்கான முழு காரணம் என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இந்த கைது தொடர்பாக திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வரும் நிலையில், சம்பவம் மாநில அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link