சென்னை: சென்னையில் வார தொடக்க முதல் நாளான இன்று (ஜூலை 20) தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 13,150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை (ஜூலை 18) தங்கம் விலை கிராமுக்கு, 35 ரூபாய் உயர்ந்து, 13,135 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 280 ரூபாய் அதிகரித்து, 1,05,080 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம், 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று (ஜூலை 19) விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றிமில்லை. இந்நிலையில் வார தொடக்க முதல் நாளான இன்று (ஜூலை 20) தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 13,150 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி ஒரு கிராம், 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
